செம்பருத்தி டீ சர்ச்சை : பதிலடி கொடுத்த நயன்தாரா..
சமீபத்தில் நடிகை சமந்தா அவரது இன்ஸ்டா பக்கத்தில் hydrogen peroxideஐ nebuliserல் பயன்படுத்தியதாக போட்ட பதிவு வைரல் ஆகி பெரிய சர்ச்சையாகவும் மாறியது. அதை ஒரு மருத்துவர் எதிர்த்து பதிவிட்டதால் சர்ச்சை ஆனது.அதே போன்ற ஒரு சர்ச்சையில் நடிகை நயன்தாரா சிக்கி இருக்கிறார். அவர் செம்பருத்தி டீ பற்றி ஒரு பதிவை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.செம்பருத்தி டீ diabetes, high cholesterol, high blood pressure மற்றும் இதய கோளாறு போன்றவற்றை சரிசெய்ய உதவும் என நயன்தாரா பதிவிட்டு இருக்கிறார்.அதற்கு ட்விட்டரில் The Liver Doc என்ற பெயரில் இருக்கும் ஒரு மருத்துவர் "இது நிரூபிக்கப்படாத ஒன்று" என குறிப்பிட்டு நீண்ட பதிவை போட்டிருக்கிறார். இதனால் இந்த விவகாரம் இணையத்தில் சர்ச்சையாகி பலரும் நயன்தாராவுக்கு ஆதராகவும் எதிராகவும் பதிவிட்டு வந்தனர்.
அவர்களுக்கு நயன்தாரா தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். "முட்டாள்களிடம் விவாதம் செய்யாதே. உங்களை அவர்கள் மட்டமான நிலைக்கு இழுத்து சென்று, அவர்களின் அனுபவத்தால் தோற்கடித்துவிடுவார்கள்" என நயன்தாரா கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.மேலும் செம்பருத்தி டீ எப்படி செய்ய வேண்டும் என அவர் புதிதாக ஒரு பதிவையும் போட்டிருக்கிறார்.