×

நயன் தாராவுக்கு ஜோடியாகும் இளம் ஹீரோ -யார் தெரியுமா ?

 

நடிகை நயன் தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார் .இவர் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த சந்திரமுகி முதல் ஐயா ,போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளது .மேலும் இவர் ஹீரோயினாக நடித்த அறம் போன்ற படங்களும் வெற்றி பெற்றுள்ளது .அவர் இப்போது ஒரு இளம் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறார் .அந்த படம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
தமிழ் திரையுலகில் "லிப்ட், டாடா, ஸ்டார் மற்றும் கிஸ்" என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தவர் கவின். தற்போது இவர் , லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.
இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.