'Nayanthara Beyond the Fairy Tale' ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
Nov 9, 2024, 14:49 IST
தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக 'ஐயா' படத்தில் அறிமுகமான நயன்தாரா, இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்த்துக்கு ஜோடியாகி 'சந்திரமுகி' படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு , இந்தி மொழிகளில் நடித்து திரைத்துறையில் முன்னணியில் இருக்கிறார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'ஜவான்' திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் கோடிகளை அள்ளிக்குவித்தது மட்டுமில்லாமல் இந்தியில் நயன்தாராவுக்கு மாஸ் என்ட்ரியை கொடுத்தது. நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திருமண கிளிம்ஸுடன் வெளியானது. நயன்தாராவின் குழந்தை பருவம் முதல் இளம் வயதில் அவர் சந்தித்த வெற்றிகள், துயரங்கள், விக்னேஷ் சிவனுடனான காதல் திருமணம் வரை அனைத்தையும் ஆவணப்படமாக வெளியிடவுள்ளனர். 'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், வரும் 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவண படத்தை வெளியிடவுள்ளது. இந்நிலையில், 'Nayanthara Beyond the Fairy Tale' ஆவணப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை ரசிகர்கள் ரசித்து கொண்டாடி வருகின்றனர்.
<a href=https://youtube.com/embed/KwTAGoleHAY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/KwTAGoleHAY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">