×

ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள 'கனெக்ட்'... நயன்தாரா பிறந்தநாளையொட்டி டீசர் வெளியீடு !

 

 நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா, தற்போது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கனெக்ட்'.  இப்படத்தை ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கிவுள்ளார்.  நயன்தாராவின் சொந்த நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. 

இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஹாரர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ‌. 

இந்நிலையில் விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. நயன்தாரா பிறந்தநாளையொட்டி வெளியான இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/X8npxGmbXfQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/X8npxGmbXfQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">