×

 சிவப்பு புடவையில் ஜொலிக்கும் நயன்தாரா!

 

நடிகை நயன்தாரா ஆயுத பூஜை மற்றும் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிவப்பு புடவையில் விக்னேஷ் சிவனுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
 
 பிரபல நடிகை நயன்தாரா சமீப காலமாக சமூக வலைதளத்தில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். வெளிநாடுகள் மற்றும் ஏதோ ஒரு புதிய இடத்திற்கு சென்றாலும் சரி, தன் கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் மற்றும் தனது செல்லக் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நயன்தாரா சமீபத்தில் வெளிநாட்டில் மூக்கு குத்திக் கொண்ட போது எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. அதே போல் விக்னேஷ் சிவனும் சமூக வலைதளத்தில் தனது மனைவி நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படஙக்ளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நயன்தாரா இன்று ஆயுத பூஜை மற்றும் நவராத்திரி விழாவை தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.

allowfullscreen


அதனை முன்னிட்டு சிவப்பு புடவை அணிந்து தனது கணவரோடு எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன் “என் உயிர்” என பதிவிட்டுள்ளார். நயன்தாரா சிவப்பு புடவையுடன் வெளியிட்ட பதிவு இன்ஸ்டாகிராமில் பல இதயங்களை வென்று வருகிறது.

மேலும் இந்த ஜோடியை பார்க்க மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை நயன்தாரா தற்போது மன்னாங்கட்டி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவன், ப்ரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் 'Love Insurance Kompany' என்ற படத்தை இயக்கி வருகிறார்.