×

பாக்ஸ் ஆபிஸில் மையம் கொண்டுள்ள ‘அன்னபூரணி’- 2ஆம் நாள் கலெக்ஷன்.

 

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ முதல் இரண்டு நாளில் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படம் ‘அன்னபூரணி’. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படம் முதல் நாளில் ரூ.60 லட்சம் வசூலித்த நிலையில் இரண்டாவது நாளில் ரூ.90 லட்சம் வசூலித்துள்ளது. மொத்தமாக இரண்டு நாட்களும் ரூ.1.5 கோடி வசூலித்துள்ளது. தொடர்ந்து இன்று விடுமுறை என்பதால் படத்தின் வசூல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.