×

பாதிப்பு!....- புயலால் சரிந்த ‘அன்னபூரணி’ கலெக்ஷன்.

 

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நயன்தாராவின் அன்னபூரணி படம் மிக்ஜாம் புயல் காரணமாக வசூலில் பாதிப்பை சந்தித்துள்ளது.

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படம் ‘அன்னபூரணி’. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் முதல் மூன்று நாட்களில் ரூ 3.5 கோடி வசூலித்த நிலையில் ஐந்து நாட்கள் ஆன நிலையில் படம் வெறும் ரூ. 4 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இந்த அளவுக்கு வசூல் குறைய காரணம் மிக்ஜாம் புயல்தான்.  மிக்ஜாம் மக்களின் இயல்பு வாழ்கையை பிரட்டிபோட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் படத்தின் வசூலும் அவாராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.