×

நயன்தாரா அணியும் பிரேஸ்லட்டின் விலை 23 லட்சம் ரூபாய்-சேலை விலை எவ்வளவு தெரியுமா ?

 

பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளாமல் இருக்கும் நடிகை நயன்தாரா டாக்ஸிக் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆரஞ்சு நிற புடவையை அணிந்து வந்தார். இயக்குனர் விஷ்ணுவர்தனின் மனைவி அனுவர்தன் வடிவமைத்த புடவை தான் அது. புடவையில் வெளிச்சம் படும்போது மின்னும்படி வடிவமைத்திருக்கிறார்கள்.

அந்த புடவையின் விலை 22,900 ரூபாயாம். மேலும் நயன்தாரா அணிந்திருந்த நெக்லஸ், பிரேஸ்லட், மோதிரம் ஆகியவை தமன்னாவின் நகைக்கடையில் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 600க்கும் மேற்பட்ட வைரங்கள் அந்த நெக்லஸில் இருக்கும் என்றும் பிரேஸ்லட்டின் விலை 23 லட்சம் ரூபாய் என்றும் மோதிரத்தின் விலை ரூ. 6 லட்சத்து 25 ஆயிரம் என்று கூறப்படுகிறது.