×

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் ட்ரைலர் இந்த தேதியில் தான் வெளியாகிறது!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டெர்னர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளனர். நயன்தாரா இந்தப் படத்தின் அம்மனாக நடித்துள்ளார். ஆர்ஜே பாலாஜியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது மூக்குத்தி அம்மன் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமைகளை விஜய்
 

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டெர்னர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளனர். நயன்தாரா இந்தப் படத்தின் அம்மனாக நடித்துள்ளார். ஆர்ஜே பாலாஜியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது மூக்குத்தி அம்மன் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமைகளை விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இப்படத்தின் ட்ரைலர் அக்டோபர் 25-ந்தேதி வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுளளது.

இப்படத்தை அடுத்து மிலிந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் என்ற படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.