×

நயன்தாரா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிரபல பாடகி.. வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான் !

 

 நயன்தாராவின் ‘டெஸ்ட்’ படத்தில் பிரபல பாடகி இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையான நயன்தாராவில் உருவாகும் திரைப்படம் ‘டெஸ்ட்’. டெஸ்ட் கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் YNOT studios சார்ப்பில் சசிகாந்த் தயாரித்து வருகிறார். பிரபல தயாரிப்பாளரான சசிகாந்த், இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகிறது. 

இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து மாதவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் சித்தார்த், ராஷி கண்ணா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின்  படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தில் பிரபல பெண் பாடகியாக சாக்தி ஸ்ரீ, இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள அவர், நயன்தாரா படத்தில் இசையமைப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளராக அறிமுகமாகும் சாக்தி ஸ்ரீக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.