×

நயன்தாராவின் புதிய பட அப்டேட் நாளை ரிலீஸ்...!

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரின் வாழ்க்கை ஆவண திரைப்படம் நாளை இவர் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனுஷ் இந்த படத்தில் இடம் பெற்ற நானும் ரவுடி தான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்த 10 கோடி ரூபாய் கேட்டதாக நயன்தாரா அவர் மீது குற்றம் சாட்டியது. இணையத்தில் மிகப் பெரிய பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் நயன்தாரா அடுத்து நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

அதில் நயன்தாரா கையில் உலக்கை வைத்து இருக்க அவருக்கு முன் பெரிய பெரிய ரவுடிகள் இருப்பது போல காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் மற்றும் மூவிவெர்ஸ் இந்தியா தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் இதற்கு முன் இமைக்கா நொடிகள், யானை, திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற வெற்ரி திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.படத்தின் இயக்குனர் மற்றும் சக நடிகர்கள்களை பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.