திரையிலும் நட்சத்திரம்.. வாழ்க்கையிலும் நட்சத்திரம்..நயன்தாரா திருமண வீடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு..
நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வீடியோ ரிலீஸ் ஆகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்பிளிக்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
'நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதல் மலர்ந்த நிலையில், இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரம் அருகே திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் என்பதும், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்தது.
இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நெட்பிளிக்ஸ், ‘திரையிலும் நட்சத்திரம், வாழ்க்கையிலும் நட்சத்திரம்.. நயன்தாராவின் திருமண வீடியோவை காண தயாராகுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் இந்த வீடியோவை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.