×

'காதல் ஃபெயில்' NEEK 2வது பாடல் நாளை வெளியீடு

 
நடிகர் தனுஷ் ராயன் படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இது ரோம்-காம் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் `கோல்டன் ஸ்பேரோ' வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இன்றுவரை இந்தப் பாடலின் வியூஸ் மற்றும் ரீல்ஸ் எண்ணிக்கை சமூக வலைதளங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவலை படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது. அதன்படி இந்தப் படத்தின் 'காதல் ஃபெயில்' பாடல் நாளை வெளியாகவுள்ளது. இப்பாடலின் வரிகளை தனுஷ் எழுதி பாடியுள்ளார். இதுக்குறித்து சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் ஜென் Z சூப் பாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.