×

நீண்ட நாள் கழித்து திரையரங்கில் வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ – ரிலீஸ் தேதியும் அறிவிப்பு…

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் கடந்த 2016ம் ஆண்டு உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இதில் ஹீரோயின்களாக ரெஜினா, நந்திதா நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், பி.மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டே வெளியாகி இருக்க வேண்டிய இந்தப்படம் நிதி நெருக்கடி காரணமாக தள்ளிப்போய் கொண்டே
 

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இயக்குனர் செல்வராகவன் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் கடந்த 2016ம் ஆண்டு உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இதில் ஹீரோயின்களாக ரெஜினா, நந்திதா நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், பி.மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டே வெளியாகி இருக்க வேண்டிய இந்தப்படம் நிதி நெருக்கடி காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இருப்பினும் படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படம் OTTயில் ரிலீஸ் என தகவல் வெளியானது. அதனை மறுத்த படக்குழு, திரையரங்குகளில் தான் படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீண்ட நாள் ரிலீசாகாமல் இருந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி வரும் மார்ச் 5ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் ப்ராமோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.