'இட்லி கடை' படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியீடு..!
Jan 13, 2025, 18:49 IST

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'இட்லி கடை' திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.