ஜிகர்தண்டா 2 படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்
கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்களான சித்தார்த், பாபி சிம்ஹா, லெட்சுமி மேனன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்த பாகத்திற்கு ஜிகர்தண்டா பபுள் எக்ஸ் என பெயரிட்டுள்ளனர். இதில் நடிகர்களான ராகவாலாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளானர். வரும் தீபாவளியை முன்னிட்டு படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், படத்திலிருந்து மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.