×

மெரி கிறிஸ்துமஸ் படத்தின் புதிய பாடல் வெளியீடு

 

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் இணைந்து நடித்துள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தை ‘அந்தாதுன்’ பட இயக்குநரான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ராதா சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.  ‘மெரி கிறிஸ்துமஸ்’ படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது.  அதன் பின்னர் டிசம்பர் 15, டிசம்பர் 8 என மாற்றப்பட்ட நிலையில் தற்போது படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என தெரிகிறது. இறுதியாக ஒருவழியாக படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. 

<a href=https://youtube.com/embed/11Bf89nHffU?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/11Bf89nHffU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இத்திரைப்படத்திலிருந்து ஏற்கனவே பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்திலிருந்து புதிய பாடல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.