ரெய்டு படத்திலிருந்து புதிய பாடல் நாளை வெளியீடு
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ரெய்டு படத்திலிருந்து இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
அண்மையில், விக்ரம் பிரபு நடிப்பில் இறுகப்பற்று என்ற படம் வெளியான நிலையில், அடுத்து ரெய்டு வர உள்ளது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான தகறு என்ற படத்தின் ரீமேக் தான் இந்த ரெய்டு திரைப்படம் ஆகும். இப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் ஸ்ரீதிவ்யா, ஆனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தர்ராஜன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கார்த்திக் இயக்கி உள்ளார், சாம் சி. எஸ் இசை அமைத்துள்ளார். ரைடு திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறித்திருந்தது.
இந்நிலையில், ரெய்டு திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.