5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடிக்கும் நிஹாரிகா
தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை நிஹாரிகா. முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள் ஆவார். தமிழில் ‘விழித்திரு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அதன்பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதற்கிடையே சைதன்யா என்பவரை நீண்ட நாட்களாக நடிகை நிஹாரிகா காதலித்து வந்தார். இவர் ஆந்திராவில் பிரபல போலீஸ் அதிகாரி பிரபாகர் ராவின் மகன் ஆவார். இதையடுத்து சைதன்யா மற்றும் நிஹாரிகா திருமணம் கடந்த 2020-ஆம் ஆண்டு உதய்ப்பூரில் உள்ள அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்கள், திடீரென பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஷான் நிகேம் நடிக்கும் மெட்ராஸ்காரன் திரைப்படத்தில், நாயகியாக நடிக்க நிஹாரிகா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.