×

"அழகிய லைலா" புகழ் நடிகையுடன் இணையும் ஆர்யா.. அப்டேட் இதோ!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் ஆர்யா. இவர் அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இவரது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை, டெடி, ராஜா ராணி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் கடைசியாக தமிழில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதை தொடர்ந்து, நடிகர் ஆர்யா தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். லூசிபர், எம்புரான் போன்ற படத்திற்கு கதை எழுதிய முரளி கோபி தான் இப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இந்த படத்தை ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில், மலையாள சென்சேஷனல் நடிகையான நிகிலா விமல் நடிக்க உள்ளார். இவர் 'குருவாயூர் அம்பலநடையில்' படத்தின் மூலம் சமீபத்தில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டில் பரவலாக பேசப்பட்டார்.இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இதை தொடர்ந்து இப்படத்தின் பூஜை நேற்று ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதுகுறித்த பதிவினை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.