×

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் சூப் சாங் இணையத்தில் வைரல் 

 

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திலிருந்து தனுஷ் பாடியுள்ள சூப் சாங் வெளியாகி உள்ளது.  
நடிகர் தனுஷ் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனர் என்பதையும் நிரூபித்து வருகிறார். அதன்படி ஏற்கனவே இவரது இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ராயன் எனும் திரைப்படத்தையும் இயக்கி பெயர் பெற்றார் தனுஷ். அடுத்தது இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். அதே சமயம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் ஆகிய பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். லியோன் பிரிட்டோ இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஜிகே பிரசன்னா எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். <a href=https://youtube.com/embed/RYV0qI2xfck?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/RYV0qI2xfck/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கோல்டன் ஸ்பேரோ எனும் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது தனுஷ் குரலில் காதல் ஃபெயில் எனும் சூப் சாங் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.