×

'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' 3வது பாடல் வெளியானது 
 

 

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்தாண்டு பிப். 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது. தனுஷின் சகோதரி மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

<a href=https://youtube.com/embed/gEC8IEZYxc0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/gEC8IEZYxc0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ, காதல் ஃபெயில் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், மூன்றாவது பாடலான, 'ஏடி' பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பில் விவேக் எழுதிய இப்பாடலை தனுஷ் மற்றும் ஜோனிடா காந்தி பாடியுள்ளனர்.