×

நடிகை நித்யா மேனன் நடிக்கும் புது படம் -இயக்குனர் யார் தெரியுமா ?

 

இயக்குனர் டி கே இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரிச்சர்ட் கெவின் மேற்கொள்கிறார். ஃபேண்டஸி மற்றும் டார்க் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை வி.எஸ். ராஜ்குமாரின் லியோ விஷன் நிறுவனமும், நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் விக்ரம் கே. குமார் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார். இவர் தமிழில் யாவரும் நலம், சூர்யா நடித்த 24 படங்களையும் தெலுங்கில் மனம், குஷி உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.