தமிழ் ஹீரோவால் துன்புறுதப்பட்டேனா?......-உண்மையை உடைக்கும் ‘நித்யா மேனன்’.
‘தமிழ் நடிகர் ஒருவரால் படப்பிடிப்பு சமயத்தில் துன்புறுத்தலுக்கு ஆளானேன்’ என்று நிதியா மேனன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியதாக செய்திகள் பரவ, அது குறித்த உணமையை கூறியுள்ளார் நித்யா மேனன்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என ரவுண்டு கட்டி அடிக்கும் நடிகை நித்யா மேனன். சமீபத்தில் இவர் தனுஷுடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் பட்டையை கிளப்பியது. தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார், அதேப்போல அவரது நடிப்பில் தெலுங்கில் ‘குமார் ஸ்ரீமதி’ என்ற படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் நித்யா மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில்’ தெலுங்கு சினிமாவில் நான் எந்த பிரச்சனையும் எதிர் கொண்டதில்லை, தமிழில் நடிகர் ஒருவர் படப்பிடிப்பு சமயத்தில் என்னிடம் சீண்டலில் ஈடுபட்டார்” என கூறியதாக செய்திகள் உலா வந்தன. அதன் உண்மை தன்மை குறித்து விளக்கம் கொடுத்துள்ள நித்யா, “ இது முற்றிலும் தவறான பெய்யான செய்தி, நான் இதுபோல எந்த நேர்காணலும் கொடுக்க வில்லை. இந்த வதந்தியை யார் முதலில் துவங்கினார்கள் என்று தெரிந்தால் என்னிடம் சொல்லுங்கள்” என திட்ட வட்டமாக மறுத்துள்ளார் நித்யா மேனன்.