×

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் முன்னணி நடிகை.. யார் தெரியுமா? 

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மகாராஜா. இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.இதை தொடர்ந்து, விஜய் சேதுபதி ஆறுமுக குமார் தயாரிப்பில் ஏஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில், விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தது.தற்போது, இந்த தகவல் நடிகை நித்யா மேனன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை பற்றி நித்யா மேனன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.அதில், "விஜய் சேதுபதியுடன் நான் ஏற்கனவே, 19(1)(ஏ) என்ற மலையாள படத்தில் ஒரு சில காட்சியில் இணைந்து நடித்துள்ளேன். அதை தொடர்ந்து, மீண்டும் அவருடன் படத்தில் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பாக நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்துள்ளது. இந்த படத்தில், அவருடன் சேர்ந்து நடிக்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்" என்று கூறினார்.மேலும், இது போன்ற ஒரு வித்தியாசமான ஜானரில் நடிப்பது இதுதான் முதல் முறை என்றும் எனக்கு இந்த கதை மிகவும் பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார். இவர்கள் கூட்டணி எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.