×

உடல் எடை கூடி ஆளே மாறிப்போன நடிகை நிவேதா தாமஸ்.. 

 

குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் திரையுலகில் கதாநாயகியாக மாறியவர் நடிகை நிவேதா தாமஸ். சின்னத்திரையில் ஒளிபரப்பான மை டியர் பூதம், அரசி போன்ற சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
 
இவர் விஜய்யின் குருவி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். பின் ஜில்லா திரைப்படத்திலும் விஜய்யின் தங்கையாக நடித்தார். ஜெய் நடிப்பில் வெளிவந்த சரஸ்வதி சபதம் திரைப்படம் தான் இவர் கதாநாயகியாக தமிழில் அறிமுகமான திரைப்படமாகும். மேலும் தர்பார் திரைப்படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.