யாரும் எங்கிட்ட இப்படி கேட்டதில்ல.. விஜய் குறித்து மனம் திறந்த ராதா ரவி..!
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய் நடிப்பில் வெளி வந்த கோட் திரைப்படம் மாபெரும் வெற்றியை தந்த நிலையில் விஜய் தற்போது கடைசி படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்நலையில் தமிழக அரசியலில் முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்க திட்டமிட்டு இருக்கும் விஜய், அதற்கென கட்சி ஒன்றை ஆரம்பித்து உறுப்பினர்களை விரைவாக சேர்த்து வருவதோடு முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். தளபதி விஜய் பொருத்த வரை அவர் சர்க்கார் திரைப்படத்தில் ராதாரவியோடு இணைந்து நடித்திருக்கிறார். அப்போது அந்த படத்தில் விஜய்க்கும் ராதா ரவிக்கும் இடையே சில உரையாடல்கள் நடந்து இருக்கும். அந்த உரையாடல்களை நினைவு கூறும் விதமாக தற்போது இணையங்களில் சில செய்திகள் வெளி வந்துள்ளது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே ராதாரவியும் விஜயும் இணைந்து பிரண்ட்ஸ் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்கள். மேலும் சர்க்கார் படத்தில் ராதாரவியோடு இணைந்து நடிக்கும் போது விஜய், ராதாரவி தனியாக அழைத்துப் பேசி இருக்கிறார் அப்படி அவர் பேசும் போது தான் அவரிடம் இது வரை யாரும் கேட்காத அந்த கேள்வியை கேட்டிருக்கிறார்.