காதலிக்க நேரமில்லை படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Dec 26, 2023, 19:59 IST
முன்னணி ஹீரோவான ஜெயம்ரவி தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். படத்திற்கு “ காதலிக்க நேரமில்லை’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில் நித்யா மேனன் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவூஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தில் வினய், யோகிபாபு, லால், டி ஜே பானு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.