×

ரீல் மட்டுமல்ல ரியல் வாழ்விலும் விஜயகாந்த் ஹீரோ - சிம்பு, நடிகர் கார்த்தி உருக்கம்

 

விஜயகாந்த் மறைவுக்கு பிரபல நடிகர் சிலம்பரசன் மற்றும் கார்த்தி இரங்கல் தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை வௌியிட்டுள்ளனர். 


இந்நிலையில், கோலிவுட்டின் முன்னணி நாயகன் சிம்புவும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், இழப்பு செய்தியை கேட்டு மனம் உடைந்து போனது. ரீல் மற்றும் ரியல் வாழ்க்கையிலும் அவர் ஒரு ஹீரோ. எப்போதும் நான் ஒரு சகோதரனாகவே பார்க்கும் நபர் அவர். உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். என குறிப்பிட்டுள்ளார். அதேபோல, நடிகர் யோகிபாபும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகர் கார்த்தியும் கேப்டன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.