×

'குட் பேட் அக்லி' படத்தின் ‘ஓஜி சம்பவம்’ பாடல் ட்ரெண்டிங் நம்பர் 1...!

 

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள  'குட் பேட் அக்லி' படத்தின் முதல் பாடல்   ‘ஓஜி சம்பவம்’  யூடியூப்-ல் ட்ரெண்டிங் நம்பர் 1 இல்  உள்ளது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின்  மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், நேற்று  'குட் பேட் அக்லி' படத்தின்  ‘ஓஜி சம்பவம்’(OG Sambavam)  என்ற முதல் பாடல் வெளியானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் மற்றும் அதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் பாடியுள்ளனர். 
விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.