×

`சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் "ஓ மெரி ஜான்" வீடியோ பாடல் ரிலீஸ்...!

 

`சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் "ஓ மெரி ஜான்" வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. 

பெருசு படத்தின் வெற்றியை தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

<a href=https://youtube.com/embed/Zo7QnRHHvT0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Zo7QnRHHvT0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் பாடலான ஓ மெரி ஜான் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கருணாகரன் வரிகளில் விஜய் பிரகாஷ் மற்றும் சின்மயி இணைந்து பாடியுள்ளனர்.