"கடவுளே-அஜித்தே..!" டிரெண்டிங்கில் இணைந்த வெளிநாட்டினர்- வீடியோ வைரல்!
Oct 30, 2024, 17:15 IST
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். இதல் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. முன்னதாக அஜித் நடித்த "வலிமை" படம் குறித்த அப்டேட்கள் வெளியாகாமல் இருந்ததை அடுத்து, அஜித் ரசிகர்கள் கூட்டம் கூடிய இடங்களில் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தனர். அந்த வரிசையில், சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர்.இந்த நிலையில், மெட்ரோ ரெயில் ஒன்றில் வெளிநாட்டவர் பயணம் செய்யும் கோச்-இல் உள்ள அனைவரும் "கடவுளே-அஜித்தே" என கூறி கோஷம் எழுப்பிய சம்பவம் அரங்கேறியதாக தெரிகிறது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
A post shared by NAVEEDFILMS (@naveedfilms)