×

‘ஒன்ஸ் மோர்’ படத்தின் 2வது பாடல் வெளியீடு!

 

ஒன்ஸ் மோர் படத்தில் இருந்து இதயம் எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஒன்ஸ் மோர். இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். ரொமான்டிக் காதல் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தினை விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியிருக்கிறார். ஜெய் பீம் மணிகண்டனின் குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய வெற்றி படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஹேசம் அப்துல் வாகப் இதற்கு இசையமைக்க அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதை தொடர்ந்து இந்த படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அத்துடன் இப்படமானது 2025 பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. <a href=https://youtube.com/embed/4deZ7o3zfmI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/4deZ7o3zfmI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

அதன்படி ஏற்கனவே இந்த படத்தில் இருந்து மிஸ் ஒருத்தி எனும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இதயம் எனும் மெலோடி பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை வினித் ஸ்ரீனிவாசன் பாடி இருக்கும் நிலையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இப்பாடல்வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.