×

ஒரே ஒரு வேலுநாச்சியார்… எத்தன படந்தான் பண்ணுவீங்க..! வெடிக்கும் சர்ச்சை.!?

தென் மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்ட ‘குற்றப்பரம்பரை’ வரலாற்றை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்போவதாக இயக்குனர் பாரதிராஜாவும், பாலாவும் சண்டை போட்டுக்கொண்டு சந்தி சிரிக்கிற அளவுக்கு வார்த்தை விளையாட்டு நடத்திய வரலாற்றை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டிங்க! அதை ரெண்டு பேருமே கைவிட்ட கண்ணீர் கதை : தனிக் கதை! இதோ, இன்னொரு பஞ்சாயத்தைக் கூட்டப் போகிற சம்பவம் கடந்த மூன்று நாளாக நடந்து கொண்டிருக்கு. எப்ப வெடிக்கும்னு தெரியல.!? விசயம் இதுதான்
 

தென் மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்ட ‘குற்றப்பரம்பரை’ வரலாற்றை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்போவதாக இயக்குனர் பாரதிராஜாவும், பாலாவும் சண்டை போட்டுக்கொண்டு சந்தி சிரிக்கிற அளவுக்கு வார்த்தை விளையாட்டு நடத்திய வரலாற்றை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டிங்க! அதை ரெண்டு பேருமே கைவிட்ட கண்ணீர் கதை : தனிக் கதை!

இதோ, இன்னொரு பஞ்சாயத்தைக் கூட்டப் போகிற சம்பவம் கடந்த மூன்று நாளாக நடந்து கொண்டிருக்கு. எப்ப வெடிக்கும்னு தெரியல.!? விசயம் இதுதான் – மூன்று நாளைக்கு முன்னாடியே வீரமங்கை வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாற்றை வைத்து ஒரு படம் பண்ணப் போவதாகவும், வேலு நாச்சியாராக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாகவும் மீடியாக்களில் சொல்லியிருந்தார் சுசி.கணேசன்.

அதே வேலுநாச்சியார் கதையை படமாக்கப் போவதாக இன்று காலை ஒரு பிரஸ் ரீலீஸைத் தட்டிவிட்டிருக்கிறார் பிரபல கேமரா மேனான ராஜேந்திரன் மணிமாறன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் பணியாற்றியவர். இவரும் பிரபல நடிகையோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக சொன்னதோடு, கூடுதலாக இரண்டு தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். படத்துக்கு ஒளிப்பதிவு செய்யப் போகிறவர் பி.சி.ஸ்ரீராம். அப்புறம் இந்தக் கதையை படமாக்குவதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக வாங்கி இருப்பதாக வலிய பதிவு செய்திருக்கிறார்.

இது ஒரு பக்கமிருக்க, விஜய் டி.வியில் வேலு நாச்சியார் தொடர் ஒன்று ஏற்கனவே டெலிகாஸ்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. இதற்காக EVP -யில் பிரம்மாண்டமான செட்டுப்போட்டு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் தான் வேலு நாச்சியார் வரலாற்றைத் தூக்கிக் கொண்டு இந்த இயக்குனர்கள் இருவரும் புதிதாக கிளம்பி வந்திருக்கிறார்கள். அநேகமா பெரிய அளவில் ஒரு பஞ்சாயத்து இருக்கும்ங்கிறது மட்டும் உறுதி.!