×

ஒரே படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரி விருதைப்பெற்ற பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’…

சிறப்பு பிரிவில் ஜூரி விருது மற்றும் சிறந்த ஒலிக்கலவை விருது என இரண்டு விருதுகளை பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் பெற்றுள்ளது. தனக்கென புதிய பாதையில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை இயக்கிய வெற்றிக்கண்டவர் பார்த்திபன். கதை ஆசிரியர், இயக்குனர், நடிகர் என அனைத்திலும் இந்த படத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரே ஒரு கதாபாத்திரம், சுற்றி இருக்கும் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும் சேர்த்து நடித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருப்பார். கேமரா பார்த்திபனை மட்டும்தான் காட்டும். ஆனால்
 

சிறப்பு பிரிவில் ஜூரி விருது மற்றும் சிறந்த ஒலிக்கலவை விருது என இரண்டு விருதுகளை பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் பெற்றுள்ளது.

தனக்கென புதிய பாதையில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை இயக்கிய வெற்றிக்கண்டவர் பார்த்திபன். கதை ஆசிரியர், இயக்குனர், நடிகர் என அனைத்திலும் இந்த படத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரே ஒரு கதாபாத்திரம், சுற்றி இருக்கும் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும் சேர்த்து நடித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருப்பார். கேமரா பார்த்திபனை மட்டும்தான் காட்டும். ஆனால் இவர் மூலமாகவே அனைத்து கதாபாத்திரங்களும் நம் கண்முன் வந்து நின்று இப்படத்தை ஜெயிக்க வைத்தது.

இந்த படத்தில் பார்த்திபனின் நடிப்புக்கு பிறகு நம்மை ஆச்சர்யப்படுத்துபவர் ரசூல் பூக்குட்டி. துல்லியமான ஒலி கலவைகளின் மூலம் பார்த்திபனை சுற்றி இருக்கும் சூழ்நிலையை அழகாக உணர்த்துகிறார். ராம்ஜியின் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன், சத்யாவின் பின்னணி இசை, இளையராஜாவின் பாடல்கள் என எல்லோமே திரைப்படத்தில் பொருந்தியிருந்தது.

இந்நிலையில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருது பட்டியலில் பார்த்திபன் இயக்கி, நடித்த ’ஒத்த செருப்பு சைஸ் 7’ படம் இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒத்து செருப்பு படம் சிறப்பு பிரிவில் ஜூரி தேசிய விருதை பெற்றுள்ளது. இதேபோன்று சிறந்த ஒலி கலவைக்கு ரசூல் பூக்குட்டியு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2 தேசிய விருதுகள் பெற்றுள்ள ஒத்து செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.