ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்...!
May 21, 2025, 16:40 IST
சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ஜோஜூ ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ரெட்ரோ' . இப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் தயாரித்தன. கடந்த மே ஒன்றாம் தேதி திரைக்கு வந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் உலக அளவில் 235 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்தது.