×

'பாட்டல் ராதா' படம்: இரண்டாவது பாடலின் ரிலீஸ் அப்டேட்

 

குரு சோமசுந்தரம் நடித்துள்ள 'பாட்டல் ராதா' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. இந்த படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார்.ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்த குரு சோமசுந்தரம் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.