×

வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துள்ள விக்ரம் பிரபு... ‘பாயும் ஒளி நீ எனக்கு’ ஸ்னீக் பீக் வெளியீடு !

 

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

மாறுப்பட்ட கதைக்களத்தில் உருவாகும் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. அந்த வகையில் உருவாகியுள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு. இந்த படத்தில் இரவு நேரத்தில் பார்வை திறன் குறைந்து காணப்படும் கதாநாயகனின் வாழ்க்கை குறித்து பேசும் படமாக உருவாகியுள்ளது. 

இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ளார். வில்லனாக கன்னட நடிகர் தனஞ்ஜெயா நடித்துள்ளார். கார்த்திக் சௌத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மணிசர்மா மகன் மஹதி ஸ்வர சாகர் இசையமைத்துள்ளார். மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை எஸ்பி சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

வரும் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

<a href=https://youtube.com/embed/97jnvDKVe7A?autoplay=1&mute=1&start=17><img src=https://img.youtube.com/vi/97jnvDKVe7A/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">