×

தனுஷ் பட நடிகர் புற்றுநோயால் மரணம்.. பிரபலங்கள் இரங்கல் !

 

‘படிக்காதவன்’ படத்தில் நடித்த துணை நடிகர் பிரபு புற்றுநோயால் மரணமடைந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்தவர் பிரபு. கடந்த 2009-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘படிக்காதவன்’ படத்தில் துணை நடிகராக நடித்தார். ஒரு காட்சியில் தனுஷ் வீட்டில் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக நடித்திருப்பார். அந்த காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். 

தமிழ் சினிமாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். சமீபத்தில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார். அவரது மருத்துவ சிகிச்சைக்கு இசையமைப்பாளர் டி இமான் உதவிகள் செய்து வந்தார்.

 

இந்நிலையில் அதி தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இன்று காலமானார். இதையடுத்து அவரது உடல் இன்று மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. அவரது மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரபு மறைவு குறித்து இசையமைப்பாளர் டி இமானும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.