பஹத் பாசில் ஹீரோவாக நடிக்கும் படம் -யார் இயக்குனர் தெரியுமா ?
May 25, 2026, 07:00 IST
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இதை விஜய் சேதுபதியுடன் திரிஷா நடித்த ‘96’, கார்த்தியுடன் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் நடித்த ‘மெய்யழகன்’ ஆகிய வெற்றிப் படங்களை எழுதி இயக்கியிருந்த சி.பிரேம் குமார் எழுதி இயக்குகிறார். இதில் பஹத் பாசில் ஹீரோவாக நடிக்கிறார். இது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் 32வது படமாகும். ஹீரோயினாக ஷிவதா நாயர் நடிக்கிறார்.
கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பஹத் பாசில், மற்ற மொழிப் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். நேரடி தமிழ் படத்தில் அவர் ஹீரோவாக நடிப்பது இதுவே முதல்முறை.