×

பரமசிவன் பாத்திமா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்..

 

விமல் நடித்துள்ள பரமசிவன் பாத்திமா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. 

விமலின் 34- வது திரைப்படமாக பரமசிவன் பாத்திமா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இசக்கி கர்வண்னன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் குடிமகன், பெட்டிக்கடை மற்றும் பகிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார்.இப்படம் ஒரு மலைக்கிராமத்தில் இரு மதத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது. இரு வேறு மதத்தை சேர்ந்த விமல் மற்றும் சாயாதேவி காதலிக்கின்றனர். இவர்களின் காதலால் ஏற்படும் பிரச்சனைகள பற்றி கதைக்களம் அமைந்துள்ளது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. <a href=https://youtube.com/embed/60zAGESq9oQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/60zAGESq9oQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் முதல் பாடலான நான் மல்லி பாடல் வெளியாகி உள்ளது.