×

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி ட்ரைலர் புதிய சாதனை

 
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன் நடித்துள்ள ‘பராசக்தி’ என்ற படம், வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சிறப்பாக நடந்தது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டிரைலர்  வெளியானது. டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
 இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதில் இடம்பெற்ற வசனங்கள் மிகவும் கூர்மையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
டிரைலரில் இடம்பெறும் ஒரு காட்சியில், ‘நாங்கள் இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள். இந்திக்கும், இந்தி பேசுபவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல’ என்ற வசனம் ரசிகர் களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும், ‘டில்லிதான் இந்தியாவா? செந்தமிழைக் காக்க பெரும் சேனை ஒன்று உண்டு’ என்ற வசனமும் கவனத்தை ஈர்த்துள்ளது.