×

அடுத்த படத்திற்கு ரெடியான பாரிஸ் ஜெயராஜ் சந்தானம் !

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. அறிமுக இயக்குனர் கே ஜான்சன் மற்றும் சந்தானம் கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ் .இப்படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் கவனம் ஈர்த்தது. சமீபத்தில் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காவியத் தலைவன்,
 

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

அறிமுக இயக்குனர் கே ஜான்சன் மற்றும் சந்தானம் கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ் .இப்படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் கவனம் ஈர்த்தது.

சமீபத்தில் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்றது.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காவியத் தலைவன், செம போத ஆகாதே படங்களில் நடித்த அனைகா சோதி என்பவர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சன் மியூசிக் சேனலில் விஜேவாக பணியாற்றிய சஸ்டிகாவும் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.