பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது
Sep 13, 2024, 13:30 IST
நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் கடந்த ஜூன் 12 ஆம் தேதி 'இந்தியன் 2' படத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். மாணவர்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படம் உருவாகியிருந்தது. இந்நிலையில், தற்போது 'டீன்ஸ்' திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தகவலை பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.