☰
×

பார்ட்டியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் -என்ன நடந்தது தெரியுமா ?

 

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் சோசியல் மீடியாவில் அவர் குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் தன்னுடைய நண்பர்கள், தொழிகளுடன் கலந்து கொண்டார். அப்போது அருகே இருந்த நபர் கேக் வெட்டி அவருக்கு ஊட்டிவிட்டதோடு, ஐஸ்வர்யா ராஜேஷின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

பதிலுக்கு ஐஸ்வர்யாவும் அவரை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முத்தமிட்ட நபர் வேறு யாருமல்ல, தெலுங்கு நடிகர் நிகில் தான். இயக்குநர் ராஜமெளலி, இசையமைப்பாளர் கீரவாணியின் குடும்ப உறவினர்தான் நிகில் விஜயேந்திர சிம்ஹா.

ஐஸ்வர்யா, நிகில் நடத்தும் பாட்காஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டது முதல் இருவரின் நட்பு ஆரம்பித்துள்ளதாம். இந்த நட்பு காதலாக மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் தனது பிறந்தநாளை நிகில் கொண்டாடியபோது எடுத்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.