×

வித்தியாசமான கதைக்களத்தில் ‘பரந்தாகுது ஊர்க்குருவி’... ரிலீஸ் குறித்த அறிவிப்பு !

 

'பரந்தாகுது ஊர்க்குருவி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே ஒரு நாளில் நடக்கும் சம்பவத்தை வைத்து சர்வைவல் திரில்லர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'பரந்தாகுது ஊர்க்குருவி’. இந்த படத்தில் அறிமுக நடிகர் நிஷாந்த் ரூஷோ மற்றும் விவேக் பிரசன்னா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

அடந்த காட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் இருவர் கடையில் எப்படி தப்பிக்கின்றனர் என்பதுதான் முழு கதையாகும். அறிமுக இயக்குனர் கோ.தனபாலன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மும்பை மாடல் அழகி காயத்ரி என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராட்சசன் வினோத் சாகர், அருள் சங்கர், கோடங்கி வடிவேல், ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் மார்ச் 24-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.