"சினிமாவில் எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்" -நடிகை பார்வதி வெளியிட்ட தகவல்
Jan 15, 2026, 06:00 IST
மலையாள நடிகை பார்வதி திருவோத்து, தமிழில் வெளியான ‘பூ’, ‘மரியான்’, உத்தம வில்லன்’, ‘தங்கலான்’ உள்பட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட சில மோசமான அனுபவங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ‘மரியான்’ என்ற படத்தின் வெளிப்புற படப்பிடிப்பில் நடந்த ஒரு வருத்தமான சம்பவம் குறித்து குற்றம் சாட்டியிருக்கிறார். அது வருமாறு:
‘மரியான்’ படத்தின் ஒரு காட்சியில் நான் தண்ணீரில் நனைந்தபடி நடித்தேன். அது ஹீரோ தனுஷுடன் தோன்றும் ஒரு காதல் காட்சி. அப்போது மாற்றுவதற்கு நான் எந்த டிரெஸ்சும் கொண்டு வரவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எனது தேவைகளை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. ஒருகட்டத்தில், உடை மாற்றுவதற்காக நான் எனது ஓட்டல் அறைக்கு சென்று வரவேண்டும் என்று சொன்னேன்.
அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. எனக்கு ‘பீரியட்’ என்றும், நான் கண்டிப்பாக சென்று வரவேண்டும் என்றும் பலத்த குரலில் சொன்னேன். படப்பிடிப்பில் என்னையும் சேர்த்து 3 பெண்கள் மட்டுமே பணியாற்றினோம். அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு ஆதரவாக அங்கு யாருமே இல்லை.