×

பார்வையற்ற பெண்ணாக பார்வதி நாயர் -எந்த படம் தெரியுமா ?

 
டிசம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் கதையாக உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT தளத்தில் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம். இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
தன்னுடைய வலுவான நடிப்பால் படத்தை முழுவதுமாக தாங்கிச் செல்லும் பார்வதி நாயரின் நடிப்பு, படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. திரைக்கதையின் மர்ம மரணங்களின் விசாரணை பக்கத்தில், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதாப்பாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். மேலும், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிழல்கல் ரவி ஆகியோரின் வலுவான நடிப்பு ‘உன் பார்வையில்’ படத்தின் ஈர்க்கும் அம்சமாக திகழ்கிறது.