×

விரைவில் வெளியாகும் பசுபதியின் ‘தண்டட்டி’... புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

 
 பசுமதி நடிப்பில் உருவாகி வரும் 'தண்டட்டி' திரைப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அசத்தி வருபவர் நடிகர் பசுபதி. கடைசியான வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மிகவும் ரசிகர்களை கவர்ந்தார்.  இதையடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். தற்போது புதிய படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். 

 அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  சர்தார், ரன் பேபி ரன் ஆகிய வெற்றி படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவாளராகவும், கே.எஸ்.சுந்தரசாமி இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். 

ஏற்கனவே இப்படத்தின் வித்தியாசமான ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இசை மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.