×

 போலீஸ் வேடத்தில் பசுபதி.. ‘தண்டட்டி’ ரிலீஸ் குறித்த அறிவிப்பு !

 

 பசுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘தண்டட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல நடிகரான பசுபதி, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தண்டட்டி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவாளராகவும், கே.எஸ்.சுந்தரசாமி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். 

சர்தார், ரன் பேபி ரன் ஆகிய வெற்றி படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படம் வரும் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இசை மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.